தேவகோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்யும் இடத்தில் நிறுத்தி உள்ளார். கீழே வந்து பார்க்கும் பொழுது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் அங்கு உள்ள சிசிடி கேமராவை பார்த்த பொழுது 25 வயது மதிக்கத்தக்க மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் அப்பார்ட்மெண்டுக்கு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது சிசிடிவி யில் பதிவாகி இருந்தது இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் குறித்து உரிமையாளர் தேவகோட்டை டவுன் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.அதனைத்தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சியில் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவகோட்டையில் தற்போது தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாவட்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி மூலம் கைது செய்த போலீஸ்
