புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூரையடுத்த ஆலம்பாளையத்தில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி சரசு. இவர்களது மகன் கேசவமூர்த்தி (வயது 28). கேசவமூர்த்தி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது அதே பள்ளியில் ஊழியராக பணி புரிந்து வந்த பெண்ணுக்கும், கேசவ மூர்த்திக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி தெரியவந்ததும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்படி ஈரோட்டில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், நாளை காலை திருமணம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்யாணத்திற்கு இருவீட்டு பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த கேசவமூர்த்தி திடீரென தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டு சிறுவன் வந்து பார்த்த போது கேசவமூர்த்தி பிணமாக தொங்குவது தெரியவந்துள்ளது.

பின்னர் இதுப்பற்றி தெரியவந்தும் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடிவந்து கேசவமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். பின்னர் இச்சம்பவத்தைப் பற்றி தெரியவந்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கேசவ மூர்த்தியின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஒருவாரமாகவே கேசவ மூர்த்தி தொடர்ந்து காதலியிடம் செல்போனில் பேசி வந்து உள்ளார். இந்நிலையில் தான் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எனவே செல்போனில் பேசும் போது அவர்களுக்கு இடையே ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக மனம் உடைந்து கேவசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து அவரது காதலியிடமும் வெள்ளிதிருப்பூர் போலீசார் விசாரணை நடத்துகின்றார்கள. நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.