spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பணக்கார வீடுகள் மட்டுமே டார்கெட்: கொள்ளையடித்த பணத்தில் ஞானசேகரன் வாங்கிய பண்ணை வீடு..!

பணக்கார வீடுகள் மட்டுமே டார்கெட்: கொள்ளையடித்த பணத்தில் ஞானசேகரன் வாங்கிய பண்ணை வீடு..!

-

- Advertisement -

இரவில் கொள்ளை, காலையில் பாலியல் தொல்லை என பலே கிரிமினலாக வளைய வந்திருக்கிறான் பாலியல் குற்றவாளி ஞானசேகரன். தோண்டத் தோண்ட அவனது கிரைம் பக்கங்கள் பகீர் கிளப்புகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் பண்ணை வீட்டில் சென்று பதுங்குவது ஞானசேகரின் வழக்கம். உத்திரமேரூர் பண்ணை வீடு காஞ்சிபுரம் காவல்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது இதுவரை 20 வழக்குகள் உள்ளன. இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மட்டுமே வீடுகளில் கொள்ளை அடிப்பது ஞானசேகரின் வழக்கம்.

we-r-hiring

ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது தான் அவனது ஸ்டைல். கொள்ளையடிக்கும் வீடுகளில் மிளகாய் பொடிகளை தூவதை ஞானசகரன் வழக்கமாகக் கொண்டிருந்தான். உத்திரமேரூர் அருகே மூன்றரை ஏக்கரில் ஞானசேகரனுக்கு பண்ணை வீடு உள்ளது. 2018 ஆம் ஆண்டு முகமூடி அணிந்து கொள்ளையில் ஞானசேகரன் ஈடுபட்டான். அபிராமபுரம் தொழிலதிபர் வீட்டில் 37 சகரன் சவரன் நகைகளை திருடிய வழக்கிலும் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளான். மயிலாப்பூர், ஈ.சி.ஆர் பகுதிகளில் உள்ள பணக்காரர்கள் வீடுகளில் கொள்ளையடித்த வழக்குகளில் ஞானசேகரன் சிக்கி உள்ளான்.

ஜூலை 30, 2018 அன்று டைல்ஸ் ஷோரூம் பார்ட்னர் பாலச்சந்திரனைக் கடத்திச் சென்று, அவரை பாதுகாப்பாக விடுவிக்க அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டினார். அவரது குடும்பத்தினரும், உறவினர் முத்துக்குமாரும் பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டதையடுத்து, மதுராந்தகம் மேம்பாலத்தில் இருந்த பணம் அடங்கிய சூட்கேஸை தரையில் இறக்கி வைத்து செல்லுமாறு ஞானசேகரன் கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினர் சேர்ந்து 12 லட்சத்தை மட்டுமே கொடுத்தனர். அந்தத் தொகையை மேம்பாலத்தில் அவருக்குக் கொடுத்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் பாலச்சந்திரனை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மீதம் இருந்த 13 லட்சத்தை மேல்மருவத்தூர் அருகே பாலச்சந்திரனின் குடும்பத்தினர் ஒப்படைக்கச் சென்றபோது, ​​அப்போதைய மதுராந்தகம் காவல் ஆய்வாளர் டி.ஆண்டனி ஸ்டாலின், அவரது குழுவினர் சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்து, பாதிக்கப்பட்டவரை மீட்டனர்.

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஞானசேகரனின் தாய், மனைவியுடன் மூன்று முக்கிய சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து 5 லட்சத்தை போலீசார் மீட்டனர். இது தவிர, அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலதிபரை மிரட்ட பயன்படுத்திய போலி துப்பாக்கியையும் மீட்டனர்’’ என அதிர்ச்சி தகவல்களை மிரட்சியுடன் விவரிக்கின்றனர் போலீஸார்.

MUST READ