spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்த வடமாநில நபரை அடித்துக் கொன்ற மக்கள்

உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்த வடமாநில நபரை அடித்துக் கொன்ற மக்கள்

-

- Advertisement -

உள்ளாடையுடன் குடியிப்பு பகுதிக்குள் புகுந்து, திருட முயர்சித்த வடமாநில நபரை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

we-r-hiring

சென்னை அடுத்த தாழம்பூர் அருகே காரணை நேரு தெருவில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். இதனை கண்ட மக்கள், அவரை விரட்டிய நிலையில் அந்த நபர் கற்களை கொண்டும், காலி பாட்டில்களை கொண்டு பலமாக தாக்கியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் திரண்டு அந்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபரை தகவலின் பேரில் மீட்ட தாழம்பூர் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர்,செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்தித்த நிலையில் இன்று அதிகாலை அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இது குறித்து போலீசர் விசாரணையில் இறந்தநபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த கேசத்ர மோகன் பரமன்(43) என்பதும் தாழம்பூரில் நடைபெறும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணி புரிந்தது தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த கட்டிட ஓப்பந்ததார கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காரணை நேர தெருவை சேர்ந்த பார்காரர் ஆனந்த்(32), டிரைவர் ராஜா(28) ஊராட்சி பணியாளர் உதயசங்கர்(37) கொத்தனார் விக்னேஷ்(29) கொத்தனார் பாலமுருகன்(33) கொத்தனார் ரமேஷ்(28) ஆகிய ஆறுபேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இறந்துபோனவரின் குடும்பதினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ