சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தில் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சலோ ரம்யா. தனது அப்பாவுக்கு உணவு கொடுப்பதற்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

3 பேர் ஸ்கூட்டி வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பொழுது பின்புறமாக வந்த மினிபஸ் ஒன்று ஸ்கூட்டியில் மோதியது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் குமார் மகளான சலோ ரம்யா சம்பவம் நடந்த இடத்திலேயே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை மூலம் போலீசார் விசாரணை நடத்தி மினிபஸ் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த விபத்து மக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


