ஏடிஎம் மையங்களுக்கு வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த வாரம் ஷேக் அப்துல்லா/56 என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அவருக்கு உதவுவதாக கூறி பணத்தை எடுத்துக் கொடுக்க முயற்சி செய்வது போன்று நடித்துள்ளார்.
அவரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர் ஷேக் அப்துல்லாவின் கையில் வேறு ஒரு போலி கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு ஷேக் அப்துல்லாவின் கார்டுடன் சென்றுவிட்டார்.


பின்னர் சிறிது நேரத்தில் கருப்பையாவின் செல்போனுக்கு சிறிது சிறிதாக 1 இலட்சம் 95 ஆயிரம் ரூபாய் பணமானது அவரது வங்கி கணக்கில் இருந்து குறைந்து இருப்பதாக மெசேஜ் வந்தது. இதைத்தொடர்ந்து ஷேக் அப்துல்லா வங்கிக்கு சென்று கேட்டபோது அவர் கையில் வைத்திருந்தது போலி கார்டு என தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பழைய குற்றவாளியான தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த தம்பிராஜ் என்பது தெரியவந்தது. அவனை கைது செய்ய தனிப்படை போலீசார் தேனி விரைந்து அவனை கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர்.

தம்பிராஜ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதே போன்று ஏடிஎம் மையங்களுக்கு வரும் அப்பாவியான நபர்களை குறிவைத்து உதவுவது போல நடித்து, ஏடிஎம் கார்டுகளை திருடி பணம் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளான். சமீபத்தில் மதுரையில் கைவரிசை காட்டி சிறைக்கு சென்று வெளியே வந்தவுடன் சென்னையில் கைவரிசை காட்டியுள்ளான்.
தொடர் விசாரணையின் போதே சென்னையில் எவ்வளவு இடங்களில் கைவரிசை காட்டினான், யார், யார் உதவினார்கள் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


