spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

-

- Advertisement -

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை கைது செய்தார் சித்தூர் போலீசார்.

ஆந்திர – கர்நாடக மாநில எல்லையான சித்தூர் மாவட்டம்  வி.கோட்டா  அருகே கடந்த மாதம் 5ம் தேதி கர்நாடக மாநிலம் சீனிவாசபுரத்தை சேர்ந்த ரியாஸ் பாஷா என்பவரிடம் கர்நாடக மாநில காவல்துறை டி.எஸ்.பி. என கூறி ஒரு கும்பல் ஏமாற்றி ₹ 5 லட்சம்  பறித்து சென்றது. இதுகுறித்து ரியாஸ் பாஷா அளித்த புகாரை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.

we-r-hiring

பணத்தை பறித்து செல்லும் கும்பலை கைது செய்த போலீசார்

இந்த நிலையில் வி.கோட்டா மண்டலம் தாசர்லப்பள்ளி பெட்ரோல் பங்க் அருகே போலி போலீசார் கொள்ளையில் ஈடுபடுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி, இன்ஸ்பெக்டர் பிரசாத்பாபு  தலைமையில்  பட்ரப்பள்ளி சோதனைச் சாவடியில் வாகனங்கள் சோதனை செய்து வந்தனர்.

அப்போது  கே.ஜி. ஆஃப் ரோட்டில் இருந்து வி.கோட்டா நோக்கி வந்த கார் ஒன்று போலீசாரை பார்த்தும் காரை வேகமாக திருப்பிக் கொண்டு  தப்பியோட முயன்றபோது ​​ போலீசார் துரத்தி சென்று காரை மடக்கி நிறுத்தினர்.

இதில் காரில் கர்நாடக மாநில போலீசார் சீருடையில் இருந்தவர்கள் எதற்காக போலீசாரை பார்த்து  ஓட முயன்றனர் என பிடித்து விசாரணை செய்ததில் திடிக்கிடும் தகவல் தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை நடத்தியதில் ஆந்திரா – கர்நாடகா மாநில எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி மிரட்டி, அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து வருவது தெரிய வந்தது. மேலும் ஏற்கனவே பதிவான வழக்கிற்கு உட்பட்ட ரியாஸ் பாஷாவிடம் சிவன்னா என்பவர் விரைவில் ஒன்றிய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட உள்ளது. எங்களிடம் அதிக அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளது. எனவே அதனை மாற்றிக்கொள்ள 500 ரூபாய் நோட்டுகள் ஒரு லட்சம் வழங்கினால் 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு ரியாஸ் பாஷாவும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து ஐந்து லட்ச ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கு 6 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதாக கூறினர்.

இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பட்ரப்பள்ளி என்ற இடத்தில் ரியாஸ் பாஷாவை இரவில் வரவழைத்து சிவன்னா பணம் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தபோது ஏற்கனவே திட்டமிட்டபடி சிவன்னாவின் கூட்டாளிகளான பெங்களூரை சேர்ந்த டேனியல் கர்நாடக மாநில டிஎஸ்பி போல் சீருடை அணிந்தும் மற்ற கூட்டாளிகள் போலீசார் போன்று சீருடை அணிந்து கொண்டு அந்த இடத்திற்கு வந்தனர்.

உடனே சிவாண்ணா போலீசார் வந்து விட்டனர் ஓடிவிடுங்கள் என கூறி அவரும் தப்பி ஓட முயன்றார். ஆனால் டேனியல் தலைமையிலான போலி போலீசார் இருவரையும் பிடித்து 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் இரண்டையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

பணத்தை பறித்து செல்லும் கும்பலை கைது செய்த போலீசார்

பின்னர் அனைவரும் சேர்ந்து பணத்தை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தனர்.  இதனை அடுத்து சிவன்னா, டேனியல் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து ரியாஸ் பாஷாவிடமிருந்து சென்ற வழிப்பறி செய்து பறித்து சென்ற பணத்தை  பறிமுதல் செய்து ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே சித்தூர், பலமனேர்,வீ.கோட்டா, சிந்தாமணி என ஆந்திரா – கர்நாடகா மாநிலங்களில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

MUST READ