spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்

மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்

-

- Advertisement -

மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்

ரிஷிவந்தியம் அருகே மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவனடியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

sivanadiyar

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாறை குன்றின் மீது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவனடியார் சிவபாலன்(31) என்பவர் கோவில் பராமரிப்பு பணி மற்றும் மடம் அமைத்து சிறுவர்களுக்கு பாடம் கற்பித்து வந்துள்ளார்.

we-r-hiring

இந்த நிலையில், இந்த மடத்தில் படித்த இரண்டு சிறுவர்களிடம் சிவனடியார் சிவபாலன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுவர்கள் அவர்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிறுவர்களின் தாயார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா வழக்கு பதிவு செய்து சிவனடியார் சிவபாலனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், சிவனடியார் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவபாலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறில் ஈடுபட்ட சிவனடியார் சிவபாலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ