கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், நீதிமன்ற விசாரணை நிலுவை வழக்குகளில் அதிக முக்கியத்துவம் வழங்கி எதிரிகளுக்கு உரிய நீதிமன்ற தண்டனை பெற்று தந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தந்திட, 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்து வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்திட, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2018ம் ஆண்டு சென்னை, அம்பத்தூர் விரைவு நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காசோலை மோசடி வழக்கில் எதிரி ராஜலட்சுமி என்பவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த காரணத்தினால், மேற்கண்ட எதிரி ராஜலட்சுமி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய K-10 கோயம்பேடு காவல் நிலையத்திற்கு கடந்த 01.12.2025 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, பல்வேறு இடங்களில் தேடி, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரி ராஜலட்சுமி, பெ/வ.43, பெரியார் தெரு, நெற்குன்றம், சென்னை என்பவரை நேற்று (14.05.2026) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரி ராஜலட்சுமி விசாரணைக்குப் பின்னர் நேற்று (14.05.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டது.
நாகர்கோவில் அருகே ரூ.1.75 லட்சம் மோசடி வழக்கில் த.வெ.க பிரமுகர் கைது
