spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு நூதன தண்டனை - ஆந்திர

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு நூதன தண்டனை – ஆந்திர

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை காலை முதல் மாலை வரை கடற்கரையில் சுத்தம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி!

குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிப்பட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின் போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டிவர்களை பிடித்து பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் முன்பு ஆஜார்ப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அபராத தொகை விதிக்காமல் நூதன தண்டனை வழங்கப்பட்டது.

அதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட 52 பேரை விசாகப்பட்டினம் ஆர்.கே கடற்கரையில் உள்ள குப்பைகளை அள்ளி கடற்கரையை சுத்தம் செய்யும்படி அனைவருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்தது.

we-r-hiring

இதனையடுத்து, மூன்றாவது நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முக ராவ் மேற்பார்வையில் போலீசார் இந்த தண்டனையை நிறைவேற்றினர். அவர்களுடன் சேர்ந்து கடற்கரையில் குப்பைகளை சேகரித்தனர். இந்த நூதன தண்டனை விதிக்கப்பட்டதால் மது போதைக்கு அடிமையானவர்களின் போதை இறங்க செய்தது. இனி வரும் நாட்களில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் நிலைப்பாடு மாற வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்

MUST READ