Homeசெய்திகள்க்ரைம்தனியார் நிறுவனத்தின் தரவுகளை திருடி மோசடி - இருவர் கைது

தனியார் நிறுவனத்தின் தரவுகளை திருடி மோசடி – இருவர் கைது

-

- Advertisement -

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் பகுதியில் APR PRECAST PRODUCTS என்ற பெயரில் பிளாஸ்டிக் செப்டிக் டேங்க் மற்றும் வாட்டர் டேங்க் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனத்தை  ரோஸ்குமார் மற்றும் பாஸ்கர், அருண் ஆகியோருடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.

அந்த  நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சண்முகசுந்தரம், முருகன் ஆகியோர்  நிறுவனத்தில் இருந்து Data -களையும், நிறுவன தயாரிப்பு பொருட்களின் மாடல்களையும், வாடிக்கையாளர்களின் விவரங்களையும் திருடி அவற்றை பயன்படுத்தி தனியாக Mass Precast என்ற பெயரில் திருப்போரூர் காலவாக்கம் என்ற இடத்தில் நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தின் தரவுகளை திருடி மோசடி - இருவர் கைதுவேலை பார்த்து வந்த நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ததின் மூலம் வாடிக்கையாளரின் APR பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக ரோஸ் குமார் ஆவடி காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு  இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகாலட்சுமி விசாரணை நடத்தினார்.  இதில் அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (32), செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தை சேர்ந்த முருகன் (39),  ஆகியோரை விசாரணை செய்து மேற்படி நபர்களிடமிருந்த செல்போன் மற்றும் லேப்டாப்களில் வாடிக்கையாளர்களின் நிறுவன Data -கள் மற்றும் விவரங்கள் இருந்ததால் மேற்படி நபர்களை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ