spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் சமைத்து கூவத்தில் வீசிய முன்னாள் ராணுவ வீரர்..!

மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் சமைத்து கூவத்தில் வீசிய முன்னாள் ராணுவ வீரர்..!

-

- Advertisement -

தெலுங்கானாவில் திகிலூட்டும் வகையில் மனைவி கொல்லப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, பின்னர் பிரஷர் குக்கரில் வேகவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர் தனது 35 வயது மனைவியை மிகவும் கொடூரமாக கொன்றுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் திகிலடைந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் உடல் பாகங்களை பிரஷர் குக்கரில் வேகவைத்தார். அடுத்து உடல் பாகங்களை ஏரியில் வீசினார்.

we-r-hiring

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை, ஜனவரி 18 அன்று, குரு மூர்த்தி என்ற நபர் தனது மனைவி 35 வயதான வெங்கட் மாதவி காணாமல் போனது குறித்து ரச்சகொண்டா காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள மீர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் குரு மூர்த்தியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியைக் கொன்று, உடலைத் துண்டுகளாக நறுக்கி, பிரஷர் குக்கரில் வேகவைத்ததாகக் காவல்துறையிடம் தெரிவித்தார். பின்னர், அவர் வேகவைத்த உடல் பாகங்களை ஜில்லெகுடாவில் உள்ள ஒரு ஏரியில் வீசினார். போலீசார் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவரின் உடல் பாகங்களைத் தேடும் பணி ஏரியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட குரு மூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்தார். ஓய்வுக்குப் பிறகு, அவர் டிஆர்டிஓவில் அவுட்சோர்சிங் முறையில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தார். குரு மூர்த்தி 13 ஆண்டுகளுக்கு முன்பு மாதவியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யாரும் தன்னை சந்தேகிக்கக்கூடாது என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெற்றோருடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் முழுமையான தகவல்கள் வெளியாகும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ