6-வது நாளாகத் தொடரும் குடும்பத்தினரின் போராட்டம் – டிஜிபி உத்தரவு
கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உத்தரவிட்டுள்ளார். மாணவனின் குடும்பத்தினர் தொடர்ந்து ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை கோரி குடும்பத்தினர் போராட்டம்
கோவையில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவனின் மரணத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆறாவது நாளாகப் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சாதிப் பாகுபாடு புகார்
பள்ளியில் நிலவியதாகக் கூறப்படும் சாதிப் பாகுபாடு காரணமாகவே மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என மாணவனின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மாணவனின் மரணத்துக்கான காரணம் மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள புகார்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
கோவை மாநகர போலீசார் மீது நம்பிக்கை இல்லை! – அகிலன் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு
