Homeசெய்திகள்மாவட்டம்தமிழன் ஆள்வதல்ல... தமிழனாக ஆள வேண்டும்! – மதுரை நினைவேந்தல் நிகழ்வில் சீமான் காரசார பேச்சு!

தமிழன் ஆள்வதல்ல… தமிழனாக ஆள வேண்டும்! – மதுரை நினைவேந்தல் நிகழ்வில் சீமான் காரசார பேச்சு!

-

- Advertisement -

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற மாவீரன் பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசு மற்றும் சட்டமன்ற நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.தமிழன் ஆள்வதல்ல... தமிழனாக ஆள வேண்டும்! – மதுரை நினைவேந்தல் நிகழ்வில் சீமான் காரசார பேச்சு!

“துரோகம் தமிழனுக்கு உடன் பிறந்தது” – இன உணர்வுப் பதிவு
நிகழ்வில் மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய சீமான் தெரிவித்ததாவது:

we-r-hiring

தமிழன் தமிழனாக ஆள வேண்டும்: “தமிழர்கள் ஆள்கிறார்கள் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள முடியாது. வெறும் தமிழன் ஆள்வது நமது கனவல்ல; தமிழன் தமிழுக்கும், தமிழர்களுக்குமாகத் தமிழனாக ஆள வேண்டும். தமிழனாகப் பிறந்தவன் எல்லாம் தமிழன் ஆகிவிட முடியாது.”

துரோகத்தின் வரலாறு: “நம் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், நமக்கு எதிரிகளை விடக் காட்டிக்கொடுத்த துரோகிகளே அதிகம். தமிழனுக்கு வீரமும் மானமும் உடன் பிறந்தது போல, துரோகமும் உடன் பிறந்தே இருக்கிறது. நம் பாட்டனுக்கும் பாட்டிக்கும் உடன் பிறந்த சொந்தங்களே ரத்தத் துரோகம் செய்திருக்கிறார்கள். எனவே புரட்சிச் சிந்தனை வாய்ந்த தமிழ் மகன் மட்டுமே தமிழ்நாட்டை ஆள வேண்டும்.”

சட்டமன்றம் ஒரு ‘பிக்பாஸ்’ தியேட்டர்!
தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகளை எள்ளல் சுவையுடன் சாடிய சீமான்:

வாசிப்பில் குளறுபடி: “சட்டமன்றத்தில் தமிழைப் பார்த்துப் படிக்கும் போதே 10, 20 தவறுகள் வருகின்றன. ‘ஒன்னு, ரெண்டு’ எண்களைக் கூட சரியாகச் சொல்லத் தெரியவில்லை. காமராஜரைக் குறிப்பிட்டுக் பேசும்போது ‘கர்மவீரர்’ என்பதை ‘காமவீரர்’ என்று தவறாகப் படிக்கிறார்கள். நல்லவேளை ஐயா காமராசர் உயிருடன் இல்லை; இருந்திருந்தால் சட்டமன்றத்திலேயே வந்து தீக்குளித்திருப்பார். என்னவொரு காலக்கொடுமை!”

சர்க்கார் போஸ்டர் தான் சர்வதேசப் பிரச்சனையா?: “தமிழினத்திற்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்துள்ளன, அதற்காகப் போராடியிருக்கிறோம். ஆனால், ‘சர்க்கார்’ பட போஸ்டரைக் கிழித்ததுதான் ஏதோ சர்வதேசப் பிரச்சனை என்பது போலச் சட்டமன்றத்தில் ‘லாடு லபக்கு’ மாதிரி பேசுகிறார்கள். மீனவன் சுடப்பட்டாலோ, காவிரி நீர் மீட்கப்படாமல் போனாலோ, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தாலோ அது ‘Our Problem’ (நம் பிரச்சனை) இல்லை; ஆனால் சர்க்கார் போஸ்டர் மட்டும் தான் இவர்களுக்குப் பிரச்சனையா?”

ரியல் பிக்பாஸ்: “இன்றைய சட்டமன்றம் ஒரு தியேட்டர் போலவும், ரியல் ‘பிக்பாஸ்’ வீடு போலவும் காட்சி அளிக்கிறது. அருமையான பொழுதுபோக்காக (Entertainment) மாற்றியிருக்கிறார்கள். மக்களைப் பார்த்து ‘All is well’ என்று சொல்லச் சொல்கிறார்கள்.”

நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஆடம்பரச் செலவுகள்
அரசு நிர்வாகத்தின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர்:

அணை திறக்க 6 கோடியா?: “மேட்டூர் அணையைக் கட்டிய காலகட்டத்திலேயே மொத்தம் 10 கோடி ரூபாய் தான் செலவாகியிருக்கும். ஆனால், இன்று அந்த அணையைத் திறப்பதற்கு மட்டும் 6 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்.”

பல்கலைக்கழகக் குளறுபடி: “காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று பேசுகிறார்கள். இது என்ன கல்லாணையா, வெள்ளாணையா?”

எல்.இ.டி திரை ஆளுமை: “முதலமைச்சரைப் பார்க்க வேண்டுமென்றால் எல்.இ.டி (LED) திரை வைக்க வேண்டும் என்கிறார்கள். அதையும் மக்கள் ரசிக்கிறார்கள். இவர்களைத் ‘தற்குறி’ என்று சொல்வதே பெருமைக்குரிய வார்த்தைதான்” என்று தனது பாணியில் சாடினார்.

பேச்சின் நிறைவில், “ஒரு பிழை நடந்துவிட்டது… இவங்க நம்ம கூட பிறந்தவங்க, அவங்க நம்ம கூட பிறந்தவங்க…” என்று புலம்பியவாறே, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வின் கனவை நிறைவேற்றுவோம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

₹2.53 கோடி GST மோசடி! மூதாட்டியின் Aadhaar, PAN-ஐ பயன்படுத்தி நடந்ததாக புகார் – வங்கி கணக்குகள் முடக்கம்!

MUST READ