Homeசெய்திகள்மாவட்டம்குமரியில் அணுக்கனிம சுரங்கம் - காலாவதியாகும் கடைசி நாளில் ஓதுக்கீட்டு ஆணையை நீட்டித்து தவெக அரசு...

குமரியில் அணுக்கனிம சுரங்கம் – காலாவதியாகும் கடைசி நாளில் ஓதுக்கீட்டு ஆணையை நீட்டித்து தவெக அரசு அதிரடி அரசாணை!

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விவாதங்களைக் கிளப்பியுள்ள ‘அணுக்கனிம சுரங்கம்’ (Atomic Mineral Mining) அமைக்கும் திட்டத்திற்கான நில ஓதுக்கீட்டு ஆணையை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு ரகசியமாக அரசாணை வெளியிட்டுள்ளது. ​ஆணை காலாவதியாகும் கடைசி நாளில், தவெக அரசு இந்த நீட்டிப்பு உத்தரவைப் பிறப்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரியில் அணுக்கனிம சுரங்கம் - காலாவதியாகும் கடைசி நாளில் ஓதுக்கீட்டு ஆணையை நீட்டித்து தவெக அரசு அதிரடி அரசாணை!

 

we-r-hiring

இதன் பின்னணி மற்றும் ஒன்றிய அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பிரத்யேக (Exclusive) விவரங்கள் இதோ.

​1,144 ஹெக்டேர் நில ஒதுக்கீடு – தவெக அரசின் கடைசி நிமிட உத்தரவு
​கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்காக, சுமார் 1,144.0618 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தை ஓதுக்கீடு செய்வதற்கான ஆணை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இந்த ஓதுக்கீட்டு ஆணை இன்றுடன் காலாவதியாகவிருந்த சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக அதன் கடைசி நாளில் மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு வழங்கி தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

​சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளான இத்திட்டத்திற்கு, மாநில அரசு கடைசி நிமிடத்தில் தாராளமாக அனுமதி நீட்டிப்பு வழங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

​திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கும் ஒன்றிய அரசின் ‘IREL’ நிறுவனம்
​மாநில அரசின் இந்த அரசாணை நீட்டிப்பைத் தொடர்ந்து, முடங்கிக் கிடந்த அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் கையில் எடுக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) தீவிரமாக இறங்கியுள்ளது. குமரியில் அணுக்கனிம சுரங்கம் - காலாவதியாகும் கடைசி நாளில் ஓதுக்கீட்டு ஆணையை நீட்டித்து தவெக அரசு அதிரடி அரசாணை!

​கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அவசரக் கடிதம்
நில ஒதுக்கீட்டு ஆணை நீட்டிக்கப்பட்ட அடுத்த கணமே, ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (CRZ) அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காகத் தாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டத்திற்கு உடனடியாக அனுமதி அளிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

குமரி கடலோரப் பகுதியில் வெடிக்கும் அடுத்தகட்டப் போராட்டம்?
​கன்னியாகுமரி மாவட்டத்தின் மணற்பரப்பில் மோனசைட், இல்மனைட், ரூடைல் போன்ற அணுசக்திக்குத் தேவையான தாது மணல் அதிகளவில் கொட்டிக்கிடக்கிறது. இதனை அகழ்ந்தெடுக்க ஒன்றிய அரசு முயன்றபோது, கடலோர கிராமங்களின் வாழ்வாதாரம் அழியும், கடல் அரிப்பு ஏற்படும் எனக் கூறி மீனவ அமைப்புகளும் பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ​தற்போது மாநில அரசின் தார்மீக ஆதரவோடு ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் இந்த திட்டத்தை மீண்டும் வேகப்படுத்தத் தொடங்கியுள்ளதால், குமரி மாவட்டத்தில் மீண்டும் அணுக்கனிம சுரங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் –  வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!

MUST READ