Homeசெய்திகள்மாவட்டம்அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு

-

- Advertisement -

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வுந்துள்ளது.அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

we-r-hiring

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் சுமார் 6 டன் அளவிலான அமோனியா வாயு சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாயு கசிந்ததால் அங்கு பணியாற்றி வந்த ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகினர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மோகன், அவரது சகோதரர் ஜெகன் மற்றும் தொழிற்சாலை மேலாளர் டேனியல் ஆகியோரை பெரியபாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தொழிற்சாலையில் கசிந்த அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டேங்கர் லாரிகள் மூலம் வாயு அகற்றப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை உயர்வு; தொழிற்சாலை நிர்வாகிகள் கைது

MUST READ