Homeசெய்திகள்மாவட்டம்கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80...

கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் குரூர் கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த கனமழையின் போது மின் கம்பி அறுந்து விழுந்ததில், ஆட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சுமார் ₹25 லட்சம் மதிப்பிலான 80-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன.கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!

30 ஆண்டு கால உழைப்பு ஒரே இரவில் நாசம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் கொட்டகை அமைத்துச் செம்மறியாடுகளை வளர்க்கும் தொழிலைச் செய்து வருகிறார்.

we-r-hiring

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குரூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லபாண்டியன் என்பவரது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளைப் பராமரித்து வந்துள்ளார்.கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!

நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்
நேற்று இரவு கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இடி மின்னல் தாக்கியதில், அப்பகுதியில் சென்ற மின் கம்பி அறுந்து சுந்தர்ராஜின் ஆட்டுக் கொட்டகை மீது விழுந்தது. இதில் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில் மின்சாரம் பாய்ந்து 80-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன.

தான் பிள்ளைகளைப் போல் வளர்த்து வந்த ஆடுகள் அனைத்தும் ஒரே இரவில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, உரிமையாளர் சுந்தர்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கு: உரிமையாளர் அதிர்ச்சி
இச்சம்பவம் நடந்த உடனடியாக, சுந்தர்ராஜ் மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து மின் இணைப்பைத் துண்டிக்குமாறு கோரியுள்ளார். ஆனால், அதற்குக் காரியமாகச் செயல்பட வேண்டிய அதிகாரிகள், “மின் கம்பி செல்லும் பாதையில் ஏன் ஆட்டுக் கொட்டகை அமைத்தாய்?” என அலட்சியமாகக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்தப் பதில் பாதிக்கப்பட்ட நபரை மேலும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியது.

அரசு விசாரணை மற்றும் நிவாரணக் கோரிக்கை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள், உயிரிழந்த ஆடுகளைப் பார்வையிட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுந்தர்ராஜ் கண்ணீர் மல்கக் கூறுகையில்: “நாங்கள் இந்த ஆடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தோம். தற்போது 80-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி உதவ வேண்டும்.”

கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை: கணக்கில் வராத ₹14.57 லட்சம் பறிமுதல்!

 

MUST READ