Homeசெய்திகள்மாவட்டம்தொப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுப் பணிகள் 41% நிறைவு!

தொப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுப் பணிகள் 41% நிறைவு!

-

- Advertisement -

தொப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 41 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.தோப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுப் பணிகள் 41% நிறைவு!

தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கியப் பகுதியாக விளங்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயர்மட்ட சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 6.6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.905 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளில் இதுவரை 41 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள 4 வழிச்சாலை, 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், மலைப்பாதை பகுதியில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் உயர்மட்ட சாலையும் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவேறிய பின்னர், தருமபுரி – சேலம் இடையேயான போக்குவரத்து மேலும் சீராகி, வாகனங்களின் பயண நேரம் குறைவதுடன், சாலை விபத்துகளும் கணிசமாகக் குறையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!

MUST READ