Homeசெய்திகள்மாவட்டம்”முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது – திமுக வேட்பாளரின் பரபரப்பு வழக்கு”

”முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது – திமுக வேட்பாளரின் பரபரப்பு வழக்கு”

-

- Advertisement -

திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக வெட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடுத்துள்ளாா்.  ”முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது – திமுக வேட்பாளரின் பரபரப்பு வழக்கு”

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

we-r-hiring

தனது மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பயன்படுத்தி விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக இனிகோ இருதயராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வருமான வரித்துறை தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோதும், அதனை வேட்புமனுவில் முறையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளதாகவும் மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், வெற்றி செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் மீதான நீதிமன்றத்தின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் கடன் வசூலுக்காக கிட்னியை விற்கச் சொல்லி மிரட்டல்? பெண் பரபரப்பு புகார்

MUST READ