தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை, வரும் ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்போன்கள் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதத்தன்மையையும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் சூழலையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை கோயில் வளாகத்தில் அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செல்போன் தடையை முழுமையாக பின்பற்ற பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல் சூளையில் சிறைப்பட்ட வாழ்க்கை…4 குழந்தைகள்உட்பட 9 பேர் மீட்பு…

