HomeBreaking Newsதிருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பாதயாத்திரை முயற்சி: இந்து முன்னணியினர் 12 பேர்...

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பாதயாத்திரை முயற்சி: இந்து முன்னணியினர் 12 பேர் கைது!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வேல் மற்றும் அக்னிச் சட்டியுடன் பாதயாத்திரை செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில், இந்தப் பாதயாத்திரை முயற்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேல், அக்னிச் சட்டி ஆகியவற்றுடன் பாதயாத்திரையாகச் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பாதயாத்திரை செல்ல முயன்ற 12 பேரையும் கைது செய்த போலீசார், பின்னர் அனைவரையும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

#BREAKING திருப்பரங்குன்றம் புறப்பட இருந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!

MUST READ