Homeசெய்திகள்ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி

ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி

-

- Advertisement -

சங்கராபுரம் அருகே மின் மோட்டாரில் சுற்றி இருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை கயிறு என நினைத்து இழுத்ததால் ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தனா்.ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சிகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை பகுதியைச் சேர்ந்த வெங்கடபதி என்பவரின் வீட்டில் உள்ள மின் மோட்டாரை போடுவதற்காக சென்ற நிலையில், மின் மோட்டாரில் கயிறு இருந்ததாகவும், அதை எடுக்க முற்பட்டபோது வழவழப்பாக ஓடி உள்ளது. பின்பு அது கயிறு அல்ல பாம்பு என தெரிய வந்த நிலையில் பாம்பு சீரிய நிலையில் படம் எடுத்து ஆடியுள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடபதி வீட்டை விட்டு வெளியேறி சங்கராபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மின் மோட்டாரில் இருந்து ஆறடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது நல்ல பாம்பின் வாயிலிருந்து தவளை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. பின்பு லாவகமாக 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை தீயணைப்புத் துறையினர் பிடித்து அதனை அருகில் உள்ள காப்புக்காடு பகுதியில் சென்று விட்டனர்.

குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது – அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!

 

MUST READ