Homeசெய்திகள்இந்தியாஇஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி குறித்து விமர்சனம்... பகிரங்க மன்னிப்பு கோரிய கர்நாடக நீதிபதி

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி குறித்து விமர்சனம்… பகிரங்க மன்னிப்பு கோரிய கர்நாடக நீதிபதி

-

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சித்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார்.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான  வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோரிபாளையா பகுதியை பாகிஸ்தான் என்று கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

இந்த நிலையில், இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என குறிப்பிட்டது சர்ச்சையானதை அடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக பேசிய நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா, நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கத்திலோ தெரிவிக்கப்படவில்லை என்றும், ஒருவேளை அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ