- Advertisement -
உலகப் புகழ் பெற்ற உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை, குளிர்காலத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு 9.37 மணிக்கு சடங்குகளுடன் மூடப்பட்டது.

இதையொட்டி கோயிலில் பாரம்பரிய வழிபாடுகள், வேத மந்திரங்கள் முழக்கம் மற்றும் சிறப்பு மதச் சடங்குகள் நடைபெற்றன. பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டுக்கான பத்ரிநாத் புனித யாத்திரை நிறைவடைந்தது.
குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால், ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கோயில் நடை மூடப்படுவது வழக்கம். மீண்டும் அடுத்த ஆண்டில் கோயில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
