Homeசெய்திகள்இந்தியாகோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: சோனியா காந்தி கருத்துக்கு ராகேஷ் அஸ்தானா மறுப்பு!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: சோனியா காந்தி கருத்துக்கு ராகேஷ் அஸ்தானா மறுப்பு!

-

- Advertisement -
சோனியா காந்தியின் நினைவுக்குறிப்பு நூலான ‘Belonging: A Journey of Love’ புத்தகத்தில், 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கான காரணம் சர்ச்சைக்குரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு கோத்ரா சம்பவத்தை விசாரித்த முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா கடும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை நம்பகமானது என்றும், அதன் முடிவுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தற்போது சந்தேகங்களை எழுப்புவது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, அயோத்தியிலிருந்து திரும்பிய சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும் மதக்கலவரங்கள் ஏற்பட்டன.
இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. பின்னர் 2017-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றம் 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, மற்ற 20 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சோனியா காந்தியின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்து தற்போது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://www.apcnewstamil.com/news/india/sonia-gandhi-belonging-memoir-rajiv-gandhi-karunanidhi-cancer-revelations/247547

MUST READ