spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் பலி

சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் பலி

-

- Advertisement -

சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், இன்று நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குத்தலில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டன. அவர்களிடம் இருந்து ஏ.கே. 47, எஸ்எல்ஆர் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வனப்பகுதியில் பதுங்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

we-r-hiring

இதனியடையே, சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை மொத்தம் 257 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 861 பேர் கைதானதுடன், 789 பேர் சரணடைந்துள்ளனர். மேலும், நக்சலைட் தாக்குதல்களால் ஏற்படும் இறப்புகள் 90 சதவிகிதம் குறைந்துள்ளன.

MUST READ