Homeசெய்திகள்இந்தியாகோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் பலி..

கோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் பலி..

-

மத்திய பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது கோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் படேல் நகரில் பலேஸ்வர் மகாதேர் ஜூலேலால் என்கிற பழைமையான கோயில் ஒன்று அமைந்துள்ளது. இன்றைய தினம் ராமநவமி என்பதால் அதிக அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்துள்ளனர். அப்போது கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பழைமையான படிக்கட்டுக் கிணறு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அதிகமானோர் குவிந்ததால் பாரம் தாங்காமல் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்துள்ளது.

கிணற்றின் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் கிணற்றுக்குள் சிக்கியவர்களில் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சில காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டவர்கள் கிணற்றுக்குள் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

MUST READ