- Advertisement -
மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி
மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்ற்னார். ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது 35-40 தொழிலாளர்கள் நிகழ்விடத்தில் இருந்ததால் மேலும் பலர் அந்த இடத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து இதுவரை பதினேழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலரைக் காணவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. மீட்புப்பணிகளுக்கு பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியும் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தபட்டுவருகிறது.