Homeசெய்திகள்இந்தியா2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி...

2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி

-

- Advertisement -

புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர் சாலை விபத்தில் காயமடைந்து கடந்த 24ந் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன்  இறுதி அஞ்சலிஅவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் ஒப்புதலுடன் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவரது 2 சிறுநீரகங்கள் மற்றும் 2 விழி வெண்படலங்கள் எடுக்கப்பட்டன.

2 சிறுநீரகங்கள், ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. 2 விழிவெண்படலங்கள் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்துக்குத் தானமாக வழங்கப்பட்டன. இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் வரலாற்றில், மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து உறுப்புகள் பெறப்பட்ட 2வது நிகழ்வு இதுவாகும்.

we-r-hiring

கொடையாளியின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் அரசுச் செயலாளர் (சுகாதாரம்) சவுத்ரி முகமது யாசின், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவைகள் இயக்குநர் செவ்வேல், மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

MUST READ