Homeசெய்திகள்இந்தியாநான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்- காலை 11.30 மணி முன்னிலை நிலவரம்!

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்- காலை 11.30 மணி முன்னிலை நிலவரம்!

-

 

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்- காலை 11.30 மணி முன்னிலை நிலவரம்!
Photo: ANI

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. காலை 11.30 மணி முன்னிலை நிலவரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 160 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 03 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.இதன் மூலம் ஆளும் பா.ஜ.க. அரசு மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 199 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 109 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 72 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளிலும், பி.ஆர்.எஸ் 44 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 03 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 52 தொகுதிகளிலும், பா.ஜ.க. 37 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

MUST READ