Homeசெய்திகள்இந்தியாதெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?

தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?

-

 

எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன?- விரிவான தகவல்!
Photo: INC

தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ். குறிப்பாக, தெலங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கப் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட சுமார் 68 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு அதிர்ச்சிக் கொடுத்த காங்கிரஸ்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 52 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

MUST READ