Homeசெய்திகள்இந்தியாநான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!

-

- Advertisement -

 

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!
Photo: ANI

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சரத்குமாருடன் சசிகுமார் நடிக்கும் ‘நா நா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் நான்கு மாநில தேர்தல் முடிவு மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னணி நிலவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இன்று (டிச.03) காலை 08.30 மணி நிலவரப்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், பா.ஜ.க. 24 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 77 தொகுதிகளிலும், காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை …. டீசர் குறித்த அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 199 தொகுதிகளில் பா.ஜ.க. 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளில் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், பி.ஆர்.எஸ். 25 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

MUST READ