சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சமீபகாலமாக இளம் நடிகர்களுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வகையில் போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசு பொருளானது. அதைத்தொடர்ந்து வெளியான பரம்பொருள் திரைப்படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து நா நா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சசிகுமார், கடைசியாக மந்திரமூர்த்தி இயக்கியிருந்த அயோத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களில் சசிகுமார் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமார், சசிகுமார் கூட்டணியில் உருவாகியுள்ள நா நா திரைப்படத்தை சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்க கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. ஆக்சன் கலந்த திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் அதை தொடர்ந்து ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகமாக்கியது.
சமீபத்தில் முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது. அதே வேளையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


