spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் மோடி"- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

“444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் மோடி”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

-

- Advertisement -

 

"444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் மோடி"- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

we-r-hiring

நாடு முழுவதும் 444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.

தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…

புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்தை ஆதரித்துப் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து பற்றி எதுவும் இல்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள், ரேஷன் கடைகள் திறக்கப்படும்.

கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜா

நாடு முழுவதும் 444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. புதுவை முதலமைச்சரைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்; அவரை மோடி செயல்படவில்லை. புதுச்சேரியை போலவே தமிழகத்திலும் ஆளுநரை வைத்து தமிழக அரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுத்தது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ