Homeசெய்திகள்இந்தியாநாடு முழுவதும் இதுவரை ரூபாய் 4,650 கோடி பறிமுதல்!

நாடு முழுவதும் இதுவரை ரூபாய் 4,650 கோடி பறிமுதல்!

-

 

வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
File Photo

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக நாடு முழுவதும் ரூபாய் 4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவுத் தொடங்கும் முன் இதுவரை இல்லாத அளவில் ரூபாய் 4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூபாய் 4,650 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூபாய் 2,500 கோடி மதிப்பில் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூபாய் 460 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூபாய் 778 கோடி, குஜராத்தில் ரூபாய் 605 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 01- ஆம் தேதியில் இருந்து ஒரு நாளுக்கு சராசரியாக ரூபாய் 100 கோடி வீதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது ரூபாய் 3,475 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் தற்போது வரை ரூபாய் 4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

MUST READ