டெல்லியில் இன்று (ஜூலை 11) காலை 11.00 மணிக்கு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்- இது அந்த காலம்… தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்- இது இந்த காலம்!
தமிழக அரசு சார்பில் நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அதேபோல், மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு, அதிகரிப்பு மற்றும் மாநிலங்களுக்கு தர வேண்டிய நிலுவை ஜிஎஸ்டி தொகை, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கக் கூடிய கடன், விலைவாசி உயர்வு உள்ளிட்டவைக் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசிக்கவுள்ளார்.
முகத்தில் ரத்த காயங்களுடன் கொலை வெறியில் அர்ஜுன் தாஸ்…. வெளியானது அநீதி பட டீசர்!
ஆலோசனைக் கூட்டத்திற்க்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.