Homeசெய்திகள்இந்தியாமக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு மும்முரம்!

-

'மக்களவைத் தேர்தல் 2024'- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்ட வாக்குப்பதிவு?

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 07ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாகவும், ஒடிசா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல்

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 49 தொகுதிகளில் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

MUST READ