Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வில் 67 போ் முதலிடம் - மாணவர்கள் சந்தேகம்

நீட் தேர்வில் 67 போ் முதலிடம் – மாணவர்கள் சந்தேகம்

-

- Advertisement -
kadalkanni

நீட் தேர்வில் 67 போ் முதலிடம் - மாணவர்கள் சந்தேகம் நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம்  தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. முன்னதாக தேர்வு முடிவு ஜூன் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான நாளன்று நீட் தேர்வு முடிவுகளும் வெளியானது.

சர்ச்சையை ஏற்படுத்தியது இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் சிலருக்கு முரண்பட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டு தோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெருவது சவாலாக இருந்துவருவதோடு பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு மன உலச்சலை ஏற்படுத்துகிறது.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத்  பலப்படுத்த தனியார் கோச்சிங் மையம் போன்ற சிறப்பு வகுப்புகள் மூலமாக தேர்வுக்கு தயாராகின்றனர்.இவ்வாறு கோச்சிங் மையம் சென்று படிப்பதற்கு அனைத்து தர மக்களுக்கும் சாத்தியமாக இல்லை.தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு  கருணை மதிப்பெண் பெற்றவர்களில் 44 மாணவா்கள் முதலிடம் பிடித்தனர்.

நீட் தேர்வில் 67 போ் முதலிடம் - மாணவர்கள் சந்தேகம் ஒரு கேள்விக்கு தவறாக விடை அளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் உட்பட ஐந்து மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும் . ஆனால் இரண்டாவது இடத்தில் உள்ள மாணவர்கள் 715 மதிப்பெண்களுக்கு பதில் 719,718 என பெற்றிருப்பதால் சக மாணவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை விளக்கமளித்த நிலையில் அதனை சக மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டன. அதேபோல நீட் தேர்வு நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்திருப்பதும் அவர்களின் 11 பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதும் மாணவர்கள் மத்தியில் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்று தகவல் வந்துள்ளது. முதலிடம் பிடித்த 8 பேரில் பதிவு எண்களும் ஒரே வரிசையில் தொடங்குவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்ட 6 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது எப்படி என்றும் கேள்வி எழுந்துள்ளது.

MUST READ