Homeசெய்திகள்இந்தியாவிசாகப்பட்டினத்தில் ரயிலில் பயங்கர தீ விபத்து... ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயங்கர தீ விபத்து… ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

-

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த திருமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஏசி பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் இருந்து ஆந்திர மாநில திருமலைக்கு திருமலை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, ரயிலின் 3 ஏசி பெட்டிளில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் அலறி அடித்துகொண்டு ஒட்டம் பிடித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணிரை பீய்ச்சி அடித்து தீணை அணைத்தனர். நல்வாய்ப்பாக தீ விபத்தின்போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ