spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசிறுத்தை குட்டி போல் இருந்த காட்டுப் பூனை - பயத்தில் நடுங்கிய மக்கள்

சிறுத்தை குட்டி போல் இருந்த காட்டுப் பூனை – பயத்தில் நடுங்கிய மக்கள்

-

- Advertisement -

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள கஜுலராமரத்தில் கடந்த ஒரு வாரமாக   காட்டுப் பூனை ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்துள்ளது.

இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அதனை சிறுத்தை குட்டி என நினைத்து  அச்சத்துடன் இருந்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தபோது அது காட்டுப்பூனை  என்பதை அறிந்து பொது மக்களுடன் சேர்ந்து அதனை பிடித்து  மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால்  அதுவரை அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/go-back-modi-posters-in-chennai/88459

MUST READ