spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!

நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!

-

- Advertisement -

 

நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!

we-r-hiring

மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில் உள்ள மேற்கு பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே இன்று (ஏப்ரல் 14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மும்பை காவல்துறை, “நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே இன்று (ஏப்ரல் 14) அதிகாலை 05.00 மணியளவில் இரண்டு நபர்கள் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு அந்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று எல் கிளாசிகோ போட்டி!

ஏற்கனவே, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ‘Y+’ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ