spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்"- அதிரடியாக அறிவித்த மாநில அரசு!

“அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்”- அதிரடியாக அறிவித்த மாநில அரசு!

-

- Advertisement -

 

"அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்"- அதிரடியாக அறிவித்த மாநில அரசு!
File Photo

அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்படவிருப்பதாக கோவா அமைச்சர் ரோஹன் காகுண்டே (Information and Technology Minister Rohan Khaunte) தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்… மீண்டும் இணையும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி… எந்தப் படத்தில் தெரியுமா?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘சாட்பாட்’ (CHATBOT) எனப்படும், கணினி வழி குரல் தொடர்பு முறை ஏற்படுத்தப்பட்டு, சேவைகள் வழங்கப்படும் என கோவா மாநில சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரோஹன் காகுண்டே தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, பொதுமக்கள் குறைதீர்ப்பு, சுற்றுலா ஆகிய இரண்டு துறைகளில் மட்டும், இந்த சேவை வழங்கப்படும் என்றும், பின்னர் மற்ற துறைகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், தனியார் துறையில் அதிகரித்து வரும் நிலையில், அரசுகளும் தற்போது அந்த தொழில்நுட்பத்தை நாடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலக அளவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அசுரவளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ஐ.டி. நிறுவனங்களில் ஏராளமானோருக்கு வேலை வேலை வாய்ப்புப் பறிபோகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ