spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை !

அமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை !

-

- Advertisement -

அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

ஆந்தி ர மாநிலம் திருப்பதி சேர்ந்த 63 வயது மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும், 2 மகள்கள் உள்ளனர். ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி, அமெரிக்காவின் அலபாமா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.மேலும் அலபாமாவில் ’கிரிம்ஸன் கேர் நெட்வொர்க்’என்ற மருத்துவக் குழுவை தொடங்கி மருத்துவம் பார்த்து வந்தார்.

we-r-hiring

chennai gun shooting

இந்த நிலையில், மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி , கடந்த வெள்ளி அன்று அலபாமா நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவர் கொலை தொடர்பாக அலபாமா காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டியின் மருத்துவ சேவையை பாராட்டி அமெரிக்காவின் டஸ்கலூஸா பகுதியில் உள்ள வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ