ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்ததால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். கலப்பட பாலை விநியோகித்த அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலில் எத்திலீன் கிளைக்கால் எனும் நச்சு ரசாயனம் கலக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு, பால் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

