spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஏப்ரல் 16- ஆம் தேதி மக்களவைத் தேர்தலை நடத்த உத்தேசம்!

ஏப்ரல் 16- ஆம் தேதி மக்களவைத் தேர்தலை நடத்த உத்தேசம்!

-

- Advertisement -

 

we-r-hiring

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசு நீதி வழங்க தவறிவிட்டது – ராமதாஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, மாநாடு என பிசியாக உள்ளனர். அதேபோல், மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் வரைவுத் திட்டத்தை வழங்கியுள்ளது. ஏப்ரல் 16- ஆம் தேதி ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!

கடந்த 2019- ஆம் ஆண்டு ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த முறை 2019- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி மே 19- ஆம் தேதி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ