spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா2023ம் ஆண்டின் வருகை- மக்கள் கொண்டாட்டம்

2023ம் ஆண்டின் வருகை- மக்கள் கொண்டாட்டம்

-

- Advertisement -

2022 ஆம் ஆண்டு விடைப்பெற்று, புதியதாக பிறந்துள்ள 2023ஆம் ஆண்டை வான வேடிக்கைகளுடன் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம்.

2023ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

we-r-hiring

உலகம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

இந்த புத்தாண்டின் இனியப் பொழுதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறையட்டும் என ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, குதூகலமாக இந்தப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

புத்தாண்டு பிறப்பின் போது மக்கள், வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றார்கள். புத்தாண்டை கொண்டாட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் முக்கிய நகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதேபோல், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், காமராஜர் சாலையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் அற்ற புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


புதிய ஆங்கில ஆண்டை பசிபிக் நாடான “கிரிபாட்டி“ முதலாக வரவேற்றது, அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது. தொடர்ந்து, உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டு மிகச் சிறப்பான முறைகளில் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளார்கள். கலை நிகழ்ச்சிகளுடன் ஆடல், பாடல் என இந்தப் புத்தாண்டிற்கு மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளார்கள்.

MUST READ