Homeசெய்திகள்இந்தியாஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!

-

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது

மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் 1.75 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சி.ஜி.எஸ்.டி ரூ.30,900 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி, ஐ.ஜி.எஸ்.டி ரூ.93,600 கோடி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில், நடப்பு ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

MUST READ