spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

-

- Advertisement -

 

 

we-r-hiring
ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

பாபா ராம்தேவின் மன்னிப்பை நம்பவில்லை; அதனை நிராகரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

பதஞ்சலி நிறுவன விளம்பரங்களில் அலோபதி மருந்துகள் குறித்து தவறாகக் குறிப்பிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “பாபா ராம்தேவின் மன்னிப்பை நம்பவில்லை; அதனை நிராகரிக்கிறோம். நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க நீங்கள் அலட்சியம் காட்டும் போது நாங்களும் ஏன் காட்டக்கூடாது? பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளம் காட்ட விரும்பவில்லை.

“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? சட்டத்திற்கு உட்பட்டு நடக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதுடன், பதஞ்சலி நிறுவனர் மற்றும் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

MUST READ