Homeசெய்திகள்இந்தியாராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு

ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு

-

2 – ஆண்டு சிறை தண்டனை வழங்கிய வழக்கில் ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிப்பு.

ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு

2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் “மோடி” சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல்காந்திக்கு, கடந்த 23ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றவாளி என்னு அறிவித்து 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கிய நீதிபதி இடைக்கால ஜாமீனும் வழங்கினார். 11 நாட்களுக்கு பிறகு இன்று சூரத் செஷன்ஸ் (மாவட்ட) நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு

அதில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ராகுலின் மனுவை இன்று விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், ராகுல்காந்தி மீதான தண்டனை தீர்ப்புக்கு தடை கோரிய வழக்கை ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும், அதுவரை ராகுல்காந்திக்கு வழங்கியுள்ள இடைக்கால ஜாமீன் நீடிக்கப்படுவதாக தெரிவித்தார்.

ராகுல்காந்திக்கு ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு இருப்பதும், மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்பை தடை செய்ய கோரிய மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக செஷன்ஸ் நீதிமன்றம் கூறியுள்ளது ராகுல்காந்திக்கு கிடைத்துள்ள தற்காலிக நிவாரணமாக கருதப்படுகிறது.

MUST READ