Homeசெய்திகள்இந்தியாபாஜக தேர்தல் அறிக்கை வெளியானது!

பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது!

-

- Advertisement -

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.இதனை தேர்தல் அறிக்கை குழு தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா சீதாராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பியூஸ் கோயல் இந்த குழுவில் பங்கேற்றனர்.

27 பேர் கொண்ட குழு இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது . ‘சங்கல்ப் பத்ரா’ எனும் பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவருக்கு, முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்த தலா ஒரு பயனாளிக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு என ஒவ்வொரு திட்ட பயனாளிகளுக்கும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

MUST READ